Thursday, 12 December 2019

சபரிமலை



சபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம். 

திற்பரப்பு நீர்வீழ்ச்சி



திற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.

Wednesday, 11 December 2019

மருத்துவாமலை கார்த்திகை விளக்கீடு

மருத்துவாமலை கார்த்திகை விளக்கீடு



கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

மருந்துவாழ் மலை (Marunthuvazh Malai) அல்லது மருத்துவாமலை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்துள்ள ஒரு மலையாகும்.நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடக்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலையில் பல மருத்துவ மூலிகைகள் கிடைப்பதால் இம்மலை மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது. இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்ற போது தமிழ்நாட்டில் விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலையும் ஒன்று என்று இங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மலையில் சுமார் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ள பிள்ளைத்தடம் எனும் குகையில் ஸ்ரீ நாராயணகுரு சில ஆண்டுகள் தவமிருந்து மெய்யறிவு பெற்றார். இது ஒரு கிலோமீட்டர் பரந்தும் 800 அடி உயர்ந்தும் உள்ளது. சுவாமித்தோப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் உள்ளது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையில் தீபம் ஏற்றப்படும்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே அய்யாவழி சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது.